அண்மைய செய்திகள்

recent
-

10 – 13 வரையான தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (08) ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புகள் நாளை (08) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 2020 ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கொவிட் தொற்று நிலை குறைவடைந்ததன் பின்னர் கடந்த 25 ஆம் திகதி மீண்டும் அனைத்து பாடசாலைகளின் தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

 இதற்கிணங்க அதன் இரண்டாம் கட்டமாக 10,11,12 மற்றும் 13 ஆம் தர வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 பாடசாலைகளுக்கு செல்கின்ற மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் எவை? 

 நாளை (08) முதல் பாடசாலைக்கு வருகை தருகின்ற அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிவதோடு கைகளில் கிருமித்தொற்று நீக்குதல், சமூக இடைவெளியை பேணுதல் என்பனவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் 

 வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர் எண்ணிக்கை?

 வகுப்புகள் எவ்வாறு இடம்பெறும்? 

 வகுப்பறையில் 20 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் அனைத்து தினங்களில் திறக்கப்படவுள்ளதோடு,வகுப்பறைகளில் 21 முதல் 40 மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

10 – 13 வரையான தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (08) ஆரம்பம் Reviewed by Author on November 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.