அண்மைய செய்திகள்

recent
-

"நாடோடிகள்" எனும் வலசை!

வலசை வரும் விருந்தாளிகள் 

 கிரேக்க அறிஞரான அரிஸ்டோட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விலங்குகளுடைய பருவகால இடப்பெயர்வைப் பற்றிக் கண்டறிந்தார். பறவைகள் தங்களது இடப்பெயர்விற்கு குறைந்தது இரண்டு அச்சுகளாகிய அட்சர ரேகையையும் தீர்க்க ரேகையையும் பயன்படுத்துகின்றன என புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மனிதர்களைப் போலவே பறவைகளும் விலங்குகளும் தமது வாழிடத்தை மாற்றிக் கொண்டு வேறு இடங்கள் தேடிச் செல்கின்றன. தம்முடைய கோடை காலத்தை குளிர்ந்த இடங்களிலும், குளிரான காலத்தில் வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க பறவைகள் வேறு இடங்களை நோக்கி புலம்பெயர்வதை வலசை போதல் என்று கூறலாம். தாம் வாழ்கின்ற இடங்களில் குளிர்காலம் ஆரம்பமானதும், வெப்ப வலய நாடுகளை நோக்கிப் பறவைகள் குடிபெயரத் தொடங்குகின்றன. 

வட மற்றும் தென் அரைக்கோளங்களைச் சேர்ந்த பறவைகள் வெப்ப வலய நாடுகளான பூமத்திய ரேகை கோட்டு பிராந்திய நாடுகளிற்கு வலசை செல்கின்றன. இந்த அடிப்படையிலே பார்க்கின்ற போது வட மற்றும் தென் அரைக்கோள பிராந்தியப் பறவைகள் வலசை வரும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகின்றது. இவ்வண்ணம் இலங்கைக்கு வரும் வலசைப் பறவைகள் வட அரைக்கோளப் பிராந்தியத்தின் சைபீரியா, மொங்கோலியா, ரஷ;யா, ஐரோப்பிய நாடுகள் போன்றன பிராந்தியங்களைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. 

இப்பறவைகள் தமது பறத்தலிற்காக தெரிவு செய்கின்ற பாதைகளில் மிகவும் முக்கியமானதாய் அமைவது 'மத்திய ஆசிய பறத்தல் பாதை' ஆகும். வலசை வருகின்ற பறவைகள் அனைத்தும் ஒரே பாதையில் வந்தடைவதில்லை, மாறாக இந்தியாவின் மேற்கு கரையூடாகவும், இந்தியாவின் கிழக்கு கரையூடாகவும், அந்தமான் தீவு ஊடாகவும் ஆவணி இறுதி முதல் கார்த்திகை இறுதி வரையும் இலங்கையை வந்தடைந்து கொண்டே இருக்கின்றன. இப்பறவைகளில் நீர்ப்புலங்களில் வாழும் பறவைகள், காட்டுப்பறவைகள், கரையோரப் பறவைகள் என்பன உள்ளடங்குகின்றன. இலங்கையானது வருடத்தின் 365 நாட்களும் வெளிச்சமும், பறவைகளிற்கு ஏற்ற வெப்ப நிலையையும் கொண்டிருப்பதால் தான் அவை ஆண்டுதோறும் இங்கு வலசை வருகின்றன. 

வலசை வருகின்ற நீர்ப்புலப் பறவைகளில் 18 வகையான வாத்து இனங்கள் காணப்படுகின்றன மற்றும் ஐரோப்பாவில் இனவிருத்தி செய்யும் ஐரோப்பிய 'பஞ்சுருட்டான்' என்ற பறவைகளிலே, பெரும்பாலானவை ஆபிரிக்க கண்ட நாடுகளுக்கு வலசை செல்கின்ற போதும், ஒரு சிறுதொகை இங்கு வரவே செய்கின்றது. இந்தியாவின் மேற்கு கரையூடாகவும் காஷ;மீரிலிருந்து 'ஈபிடிப்பான்' பறவையும் இங்கு வலசை வருவதைக் காணலாம். 'ஆசிய காடுகளின் வண்ணம்' என்று அழைக்கப்படுகின்ற 'தோட்டக்கள்ளன்' என்ற பறவையும் வலசை வருகின்றது. 'பட்டத்தலை வாத்து' என்ற மொங்கோலியாவை பூர்வீகமாகக் கொண்ட வாத்தானது, 27000 உயரமான இமயமலையைக் கடந்து, இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்கு வலசை வருகின்றது. அத்தோடு னுநஅழளைநடடந ஊசயநெ மற்றும் ளுவநிpந நயபடந என்ற பறவைகளும் கூட இமயமலையைக் கடந்து இவ்விடம் வருகின்றன. 

வெளிநாடுகளில் வாழும் மக்கள் எப்படி தங்களுடைய விடுமுறைகளின் பருவகாலங்களைக் கழிக்க பிறநாடுகளிற்கு செல்கின்றார்களோ அதே போன்று பறவைகளும் கூட தங்களுடைய பருவகாலங்களைக் கழிக்க வலசை போகின்றன. இலங்கை நாடானது வலசை வரும் பறவைகளின் சீதோஷண வெப்பநிலையைக் கொண்ட அழகு மிக்க நாடாகக் காணப்படுவது பறவைகள் ஆண்டு தோறும் இங்கு வலசை வரக்; காரணமாய் இருக்கின்றது. பாரிய தூரங்களைக் கடந்து, எம் நாட்டின் பெறுமதி உணர்ந்து வருகின்ற பறவைகளிற்கு அவற்றிற்கான சுதந்திரம் காத்திரமாகக் கிடைக்க வேண்டும் என்பதோடு, வருங்காலங்களிலும் வலசை வருதல் தொடர வேண்டும் என்று சொல்வது தான் சாலச் சிறந்தது. 

 சங்கீர்த்தனா புலேந்திரன்
 நான்காம் வருடம் 
ஊடகக்கற்கைகள் துறை 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

"நாடோடிகள்" எனும் வலசை! Reviewed by Author on November 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.