அண்மைய செய்திகள்

recent
-

உயர்தர அனுமதிக்காக பாடசாலைக்கு வந்த மாணவி விபத்தில் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சல் கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். 

 இச் சம்பவம் இன்று( திங்கட்கிழமை) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர் உயர்தரம் கல்விக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்த போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. 

 ஏ9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது. இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது பின்னால் வந்த இலங்கை போக்கு வரத்து சபையின் பேரூந்து ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதி்ல் ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. 

 இதன் போது சம்பவஇடத்திலயே திருவாசகம் மதுசாளினி வயது 17 என்ற மாணவி உயிரிழ்ந்துள்ளதுடன் மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை துவிச்சக்கர வண்டியில் நாளாந்தம் ஊற்றுப்புலத்திலிருந்து கிளிநொச்சி விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளி மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் தனது மகளை உயர்தரத்திற்கு கற்பித்து அனுப்பிய நிலையில் முதல் நாளே இப் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

உயர்தர அனுமதிக்காக பாடசாலைக்கு வந்த மாணவி விபத்தில் உயிரிழப்பு! Reviewed by Author on November 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.