மீரிகமை - குருணாகல் மத்திய அதிவேக நெடுஞ்சாலை 2ஆம் கட்டம் ஜனவரி 15 இல் திறப்பு
மீரிகமை முதல் குருணாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கி.மீ. என்பதுடன், இதற்காக ரூபா 137 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
சூழல் மற்றும் சமூக ரீதியான பாதிப்பு குறைவானதாக இருக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை நகர்ப்புற பிரதேசங்களைத் தவிர்த்து, பிரதானமாக வெற்று காணிகள் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீரிகமைவிலிருந்து குருணாகல் வரையிலான இவ்வீதி, தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வீதியானது, உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் உள்நாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.
மீரிகமை - குருணாகல் மத்திய அதிவேக நெடுஞ்சாலை 2ஆம் கட்டம் ஜனவரி 15 இல் திறப்பு
Reviewed by Author
on
December 30, 2021
Rating:
No comments:
Post a Comment