அண்மைய செய்திகள்

recent
-

பொரளை நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை

பொரளை – மருதானை வீதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையமொன்றில் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டு சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த கொள்ளையை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

 தங்க நகைகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடமும் நகைகள் திருடப்பட்டதாக அவர் கூறினார். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

.
பொரளை நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை Reviewed by Author on December 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.