மன்னாரில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்புடன் நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர்.
இவ்வாரம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் அரச உத்தியோகஸ்தர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.
Reviewed by Author
on
January 07, 2022
Rating:
No comments:
Post a Comment