அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன் உக்ரேனிய பிரஜைகள் ஆர்ப்பாட்டம்

ரோப்பாவை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள ரஷ்யாவில் உக்ரைனின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கையில் உள்ள உக்ரைன் சமூகத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். தூதரகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரேனிய பிரஜைகள், ‘ரஷ்ய ஆக்கிரமிப்பை நிறுத்து’, ‘போரை நிறுத்து’ மற்றும் ‘ரஷ்யா வீட்டிற்கு செல்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி ‘ரஷ்யா தொடங்கிய ‘முழு அளவிலான போர்’ இராணுவம் மற்றும் பொதுமக்களிடையே முதல் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக கோசமெழுப்பினர்.

 தங்கள் குரலை உலகம் கேட்க வேண்டும் என்றும் உக்ரேனிய பிரஜைகள் இதன்போது தெரிவித்தனர். அமைதியான உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் இரவும் பகலும் இடைவிடாது தாக்குதலுக்கு உள்ளாகுகின்றன என்றும் இலங்கையில் வசிக்கும் உக்ரேனியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரஷ்ய துருப்புக்கள் உக்ரேனிய எல்லைக்குள் சட்டவிரோதமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து எல்லையை கடந்து செல்கின்றன என்றும் உலகம் ரஷ்யாவை தீர்க்கமாக தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ள அவர்கள், இது சர்வதேசத்தின் நேரம் என்றும் இதனை தடுக்க உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு, ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் போரை நிறுத்த அனைவருக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.






கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன் உக்ரேனிய பிரஜைகள் ஆர்ப்பாட்டம் Reviewed by Author on February 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.