அண்மைய செய்திகள்

recent
-

உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷ்யா

NATO இராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷ்யப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில், உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி வரும் நிலையில், அச்சமடைந்துள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். தலைநகர் கீவ் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேற்கு பகுதி மற்றும் தலைநகரங்களில் இன்று காலை வரை மக்கள் தைரியமாக இருந்தனர்.

 எனினும், ரஷ்யா எல்லா முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்துவதால், கடும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே, மக்கள் தமது வாகனங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராகி வருவதால், சாலைகளில் கடும் போக்குவரத்து நிலவி வருகிறது. இதனிடையே, கிழக்கு ஐரோப்பபிய நாடுகளில் ஒன்றான மால்டோவா நாட்டின் அதிபர் Maia Sandu உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் என மால்டோவா அதிபர் அறிவித்துள்ளார். இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமோ என்ற பீதி நிலவி வருகிறது.

 உலக அளவில் வல்லரசு நாடுகள் அணு ஆயுத போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றன. தமது நாடுகளின் பாதுகாப்பிற்காக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக தெரிவித்துள்ளன. நாடுகளிடையே போர் மூண்டால் அணு ஆயுத தாக்குதல் இடம்பெற வாய்ப்புள்ளது என்று நீண்ட காலமாகவே தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ரஷ்யா- உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு விடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷ்யா Reviewed by Author on February 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.