அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட சாரணிய வரலாற்றில் மீண்டும் ஒரு ஜனாதிபதி விருது...

மன்னார் மாவட்ட சாரணிய வரலாற்றில் மீண்டும் ஒரு ஜனாதிபதி விருது இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அதி மேதகு ஜனாதிபதி அவர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மன்னார் மாவட்டத்தில் 07 ஜனாதிபதி விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது 

அந்த வரிசையில் இம்முறை 08 ஆவது ஜனாதிபதி விருதை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் சாரணன் ஜோன் ஸ்டீபன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் இலங்கையில் ஜனாதிபதி சாரணர் விருது 1978ம் ஆண்டு அறிமுகபடுத்தப்பட்டது இருப்பினும் மன்னார் மாவட்டத்தில் 2012ம் ஆண்டே முதன்முதலில் மன்னார் மாவட்டம் பெற்றுக் கொண்டது. 

 இவ் உயரிய விருதினை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாடசாலையான புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியே இவ் முதல் விருதினைப் பெற்று கொண்டதுடன் தொடர்ந்து மேலும் 7 ஜனாதிபதி விருதுகளையும் பெற்று மொத்தமாக 8 விருதுகளையும் இக் கல்லூரியே பெற்று கொண்டது சிறப்பம்சம் ஆகும் . 

 அந்த வரிசையில் 

2012ம் ஆண்டு முதலாவதாக ஜனாதிபதி சாரணர் விருதினை 
 C.அனோஜ்குமார் 
W.R.அயந்த் பென் கனான் 
G.சுதாகரன் 

2015ம் ஆண்டு இரண்டாவதாக 
 A.D.மேரியன் ஸ்ரான்லி 
L.ஸ்பெல்வின் பெர்ணான்டோ 
P.பிரேமஜெயந் 

2017ம் ஆண்டு மூன்றாவதாக 
J.A.J.அருள்வளன் பெர்ணான்டோ 

2019ம் ஆண்டு நான்காவதாக 
Y.ஜோன்ஸ்டிபன் ஆகியோர் பெற்று மன்னார் மாவட்டத்திற்க்கும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்

 இவ்விருதினை பெற ஊக்குவித்த பாடசாலை முன்னாள் அதிபர் அருட்சகோதரர் 
J. அகஸ்ரின் அவர்களுக்கும் 

முன்னாள் அதிபர் அருட்சகோதரர் S.E.றெஜினோல்ட் அவர்களுக்கும் ,சாரண பொறுப்பாசிரியர் T.பெனில்டஸ் றோய் அவர்களுக்கும் 

இவர்களுக்கு சாரண பயிற்சிகள் வழங்கிய சாரணர் தலைவர்கள் S.சுகிர்தன், R.வரதராஜா, A.இக்னேசியஸ், P.B.சிரோன்ராஜ், C.அனோஜ்குமார். ஆகியோர்க்கும் மற்றும் 

மன்னார் மாவட்ட பழைய புதிய மாவட்ட சாரணர் ஆணையாளர்கள் அணைவருக்கும் மற்றும் கழுகு திரிசாரணர் குழாம் அங்கத்தவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.











மன்னார் மாவட்ட சாரணிய வரலாற்றில் மீண்டும் ஒரு ஜனாதிபதி விருது... Reviewed by Author on February 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.