“எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்” சிரமதான செயற்திட்டம் மன்னாரில் முன்னெடுப்பு
இதன் போது சாந்திபுரம்,கீரி,தாழ்வுபாடு,ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த சமுர்த்தி பயனாளிகள்,மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்
செளத்பார் கடற்கரை தொடக்கம் தாழ்வுபாடு வரை சுமார் 4 கிலோமீட்டர் வரையிலான கடற்கரை பகுதி மேற்படி சுத்தம் செய்யப்பட்டதுடன் அனைத்து கழிவுகளும் நகரசபையின் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்தப்பட்டன.
இதன் போது மன்னார் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்,கிராம அலுவலர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,மெசிடோ நிறுவன ஊழியர்கள்
நகர சபை சுத்திகரிப்பு பணியாளர்கள் இணைந்து கடற்கரை பகுதியில் மாபெரும் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
குறித்த செயற்திட்டம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள கடற்கரை பகுதிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
“எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்” சிரமதான செயற்திட்டம் மன்னாரில் முன்னெடுப்பு
Reviewed by Author
on
February 05, 2022
Rating:

No comments:
Post a Comment