நட்டாங்கண்டல் பொலிஸாரின் உடந்தையுடனேயே மணல் அகழ்வு அம்பலமானது ஆதாரம்
எனினும் இரு உழவு இயந்திரங்களும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாது கைதாகிய அன்றே இரவு 10 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் வைத்து விடுவிக்கப்பட்டிருந்தது குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய பதில்கடமை பொறுப்பதிகாரியை வினவிய போது, அவர்கள் உரிய அனுமதி பத்திரத்தினை வைத்திருந்தார்கள் என்று கூறினார்
அனுமதிப்பத்திர விதிமுறைகளின் படி ஆற்றுக்குள் உளவு இயந்திரத்தினை இறக்கி மணல் அகழ்வு செய்ய முடியாது இவ்வாறான நிலையிலேயே இரண்டு உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டு மாலை 4 மணியளவில் நட்டாங்கண்டல் பொலிஸ் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது இதனை எவ்வாறு பொலிசார் விடுவித்தனர் இதன் மூலம் சடடவிரோத செயற்பாடுகளுக்கு பொலிசார் உடந்தையாக செயற்படுவது உறுதியாகியுள்ளது
என்றும் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது
இதேவேளை பிரதேச சபை உறுப்பினர்களுடனான பிரத்தியேக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பதில்கடமை பொறுப்பதிகாரி சில்வா அவர்கள் குறித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் , அனைத்து கிராம மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பினை இந்த தருணத்தில் தான் கேட்டு நிற்பதாகவும் கூறியிருந்த நிலையில் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்களும் பொலிஸ் நிலையத்தில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத்து
சண்முகம் தவசீலன்
நட்டாங்கண்டல் பொலிஸாரின் உடந்தையுடனேயே மணல் அகழ்வு அம்பலமானது ஆதாரம்
Reviewed by Author
on
March 27, 2022
Rating:

No comments:
Post a Comment