தாய்மார் மீதான தாக்குதலுக்கு எதிராகக் குரல்கொடுக்க அணி திரளுங்கள் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
எதிர்வரும் 03 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பேரணி தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
பிரதமர் மகிந்தவின் யாழ் வருகையை எதிர்த்து கண்டன பேரணியை நடாத்துவதற்காக சென்றிருந்தபோது எமது தாய்மார் மீது காவல்துறையினரால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தப்பட்டது
அன்றைய தினம் எங்களுக்கு செய்த துன்புறுத்தல்கள், எங்களுக்கான அநியாயங்கள் மானபங்கப்படுத்தி கட்டிய மனைவியை கூட கணவன் தொட்டிராத இடங்களிலெல்லாம் இந்த வயது முதிர்ந்த அம்மாக்களை தொட்டு அடித்து இரும்பு கம்பிகளால் தாக்கினார்கள்.
உண்மைக்கும் நீதிக்குமாக போராடும் எம் தாய்மாருக்காக நடந்த அநீதியைக் கண்டித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(03-04-2022) காலை 10 யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து முத்தவெளி மைதானம் வரையும் கண்டன பேரணியை நடத்தவுள்ளோம்.
மட்டுவிலில் இடம்பெற்ற அநீதிக்கு எதிராகவும் அதனை கண்டித்தும் இவ்வாறான அராஜகங்கள் இனிமேல் நடக்கக் கூடாது என்பதற்காகவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
எனவே ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், உள்ளுர் அமைப்புக்கள் வர்த்தக சங்கங்கள் உட்பட அனைத்து பொது அமைப்புக்கள் விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மதகுருமார் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு அநீதிக்கு எதிராக குரல்கொடுக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவித்துள்ளார்
தாய்மார் மீதான தாக்குதலுக்கு எதிராகக் குரல்கொடுக்க அணி திரளுங்கள் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
Reviewed by Author
on
March 28, 2022
Rating:

No comments:
Post a Comment