முல்லைத்தீவில் மாணவனை காணவில்லை பெற்றோர் பொலிசில் முறைப்பாடு!
முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் உண்ணாப்புலவு முல்லைத்தீவினை சேர்ந்த கே.சானுயன் என்ன சிறுவன் 17.03.2022 அன்று மாலைநேர கல்விக்காக மாலை 6.00 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்
28.03.2022 திகதி வரையும் இவர் வீடு திரும்பாத நிலையில் இவரின் தொடர்புகள் அற்ற நிலையிலும் இவரினை தேடி கண்டுபிடித்து தருமாறு பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மாணவனை அறிந்தவர்கள் அல்லது தெரிவிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0775690671தொலைபேசி இலகத்திற்கோ அறியத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவில் மாணவனை காணவில்லை பெற்றோர் பொலிசில் முறைப்பாடு!
Reviewed by Author
on
March 28, 2022
Rating:

No comments:
Post a Comment