முல்லைத்தீவில் பல இடங்களில் எரிபொருள் எதுவுமே இல்லை! இருக்கும் இடங்களில் வரிசையில் மக்கள்
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு எரிபொருள் நிலையங்களிலும் டீசல் வந்து இறங்குகின்ற அன்றைய தினமே அனைத்தும் முடிவடையும் நிலைமை தொடர்ந்து வருகின்றது மக்கள் வீடுகளில் பதுக்கி வைப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்ற நிலையிலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகமான வரிசையில் மக்கள் நின்று எரிபொருட்களை பெற்றுக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது
குறிப்பாக இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு எரிபொருள் நிலையங்களில் எந்த ஒரு எரிபொருளும் இல்லாத நிலையில் காணப்படுகின்ற அதே வேளையில் எரிபொருள் இருக்கும் இடங்களிலே அதிக அளவிலான மக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் நிற்பதை காணக்கூடியதாக இருக்கின்றது
குறிப்பாக மண்ணெண்ணை பெறுவதற்காகவும் நீண்ட வரிசைகள் காணப்படுவதோடு குடும்ப அட்டைகளுக்கு 500 ரூபாய் வீதம் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றது
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவில் பல இடங்களில் எரிபொருள் எதுவுமே இல்லை! இருக்கும் இடங்களில் வரிசையில் மக்கள்
Reviewed by Author
on
March 28, 2022
Rating:

No comments:
Post a Comment