முல்லைத்தீவில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தி.ஜெயகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தார் 2021 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 14 மாணவர்களுக்கும் நினைவு கேடயங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 3500 ரூபா நிதியுதவியும் தென்னம்பிள்ளைகளும் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் ,தேவிபுரம் சமுர்த்தி உத்தியோகத்தர் ,தேவிபுரம் அபிவிருத்தி உத்தியோகத்தர் சமாதான நீதவான்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெற்றோர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
முல்லைத்தீவில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
Reviewed by Author
on
April 28, 2022
Rating:

No comments:
Post a Comment