மன்னாரில் எரிபொருள் இல்லாத நிலையில் பெண்கள் சிறுவர்கள் எரிபொருளுக்காக கடும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை.
குறிப்பாக மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை இல்லாத நிலையிலும் அதை பெறுவதற்காக மக்கள் கேண்களுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மேலும் டீசல் தட்டுப்பாடு தொடர்ச்சியாக காணப்படுகின்ற மையினால் மன்னார் கச்சேரி தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையம் வரை வாகனங்கள் நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது
அதே நேரம் எரிபொருள் மற்றும் எரிவாயு மின்சாரம் போன்ற சேவைகளை இவ் அரசாங்க தடையின்றி வழங்க கோரியும் இல்லை என்றால் ஆட்சியை விட்டு வெளியேற கோரியும் இளைஞர் குழு ஒன்றும் அப்பகுதியில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் எரிபொருள் இல்லாத நிலையில் பெண்கள் சிறுவர்கள் எரிபொருளுக்காக கடும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை.
Reviewed by Author
on
April 08, 2022
Rating:

No comments:
Post a Comment