அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலில் அரசியல் தலையீட்டால் குழப்பம்

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலில் அரசியல் தலையீட்டால் குழப்பம் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலில் குழப்ப நிலை இடம்பெற்றுள்ளது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கருத்தினை ஏற்றுக்கொள்ளாத நிலையிழும் நிர்வாகத்தை அமைப்பது தொடர்பிலும் நினைவேந்தல் குழுவில் அரசியல் கலப்படம் வேண்டாம் என்ற நிலையிலும் கூட்டத்தில் குழப்ப நிலை இடம்பெற்றுள்ளது 

 2022 ம் ஆண்டு மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்திருந்தனர் அதற்கமைய 17.04.2022 நேற்று மாலை 3.30 மணிக்கு முல்லைத்தீவு வட்டுவாகல் பொதுநோக்கு மண்டபத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களின் எட்டு மாவட்ட பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கயேந்திரன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் இயக்கத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 

 இதன்போது தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் அவர்களால் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ளமுடியாது இதனை நிராகரிக்கின்ற சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நினைவேந்தலை முன்னெடுக்கவேண்டும் அதற்கான ஆலோசனை கூட்டமாகத்தான் இதனை அறிவித்துள்ளோம் என்றும் இனத்தின் இழப்புக்களையும் தியாகங்களையும் அடகுவைத்து விட்டு செல்லுகின்றபோது அதனை பார்த்துக்கொண்டிருப்பதும் தவறு அடகு வைப்பதும் தவறும். நினைவேந்தல் என்பது மக்கள் என்ன நோக்கத்திற்காக உயிர்கொடுத்தார்களோ அவர்களின் நோக்கம் அடையப்படுவதை அல்லது அந்த நோக்கம் குழிதோண்டி புதைப்பதை தடுக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் அதற்கேற்றவகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு செயற்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 அத்தோடு நேற்று மாலை 3.30 தொடக்கம் மாலை 5.45 வரை 13 ம் திருத்தச் சட்டம் மற்றும் சமகால அரசியல் தொடர்பில் பல்வேறு வாத விவாதங்கள் இடம்பெற்று வந்த நிலையில் இறுதியில் அரசியல் தரப்பினராகிய தாமும் இந்த குழுவில் இடம்பெறுவது நோக்கமில்லை எனவும் சரியான கொள்கைகளை கொண்டுசெல்லக்கூடிய நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தெரிவு செய்யப்படவேண்டும் எனவும் இன்றைய தினம் ஏற்கனவே இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு கலந்துகொள்ளாததால் இன்னொரு கலந்துரையாடலில் அவர்களையும் அழைத்து நிர்வாகத்தை புதுப்பிக்கும் அல்லது தெரிவு செய்யும் நடவடிக்கைகளை மேகொள்ளுமாறும் தெரிவித்து கூட்டம் நிறைவு செய்யப்பட்டது

 இதன் பின்னணியில் கூட்டம் இடம்பெற்ற இடம் சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் கலவர பூமியானது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்களின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட தரப்பினை வைத்து வியாபாராம் செய்யாதீர்கள் என திட்டி தீர்த்துள்ளனர் இவ்வாறான பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்ற நிலையில் நிர்வாக தெரிவு எனவும் அரசியல் பிரதிநிதிகளை தவிர்த்து சிவில் சமூகமாக இந்த நினைவேந்தல் நிகழ்வை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களின் எட்டு மாவட்ட பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் அரசியல் வாதிகள் தம்மை திட்டமிட்டு தமது கொள்கைக்குள் கொண்டுவந்ததாகவும் அதை தவிர்த்து வருகைதந்த சிவில் சமூக அமைப்பினர்கள் மீண்டும் தனியானாதொரு கலந்துரையாடலை நடத்தி அவர்கள் ஏற்கனவே இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவுடனும் கலந்துரையாடி அரசியல் கலப்படமற்ற ஒரு நிர்வாகத்தை உருவாக்கி நிகழ்வை செய்வதாக தீர்மானித்தனர்

 இந்த குழப்ப நிலை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கருத்து தெரிவிக்கையில் தாம் கலந்துரையாடல் எனவே அறிவித்ததாகவும் நிர்வாகம் தெரிவது தொடர்பில் எந்த எண்ணமும் இருக்கவில்லை எனவும் ஏற்கனவே இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவும் உயிர்த்த ஞாயிறு உள்ளிட்ட சில காரணங்களால் வரவில்லை எனவும் அவர்களை இணைத்தே நிர்வாகம் உருவாக்க வேண்டும் எனவும் சிலர் இன்று திட்டமிட்டு குழப்பத்தை ஏற் படுத்தியுள்ளதாக தெரிவித்தனர் எது எவ்வாறிருப்பினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இவ்வாண்டுக்கான கூட்டத்தை கூட்டுவதற்கு முன்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த கூட்டத்தை கூட்டியமையானது தமது அரசியல் இலாபத்துக்கே எனவும் இந்நிலையில் புலம்பெயர் நபர்கள் சிலரின் கொள்கைகளில் இயங்கும் சில சிவில் அமைப்பினர் அதை தம் கையில் எடுக்க முயல்வதாகவும் குற்றம் சுமத்தும் சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு பொது அழைப்பை விடுத்து இவ்வாண்டுக்கான கூட்டத்தை கூட்டி நிர்வாகத்தை அரசியல் கலப்படமற்ற நிலையில் புணரமைப்பு பல்லாயிரக்கணக்கான மக்கள் என்ன நோக்கத்திற்காக உயிர்கொடுத்தார்களோ அவர்களின் நோக்கம் அடையப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர் 


























முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலில் அரசியல் தலையீட்டால் குழப்பம் Reviewed by Author on April 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.