நாட்டிற்கு ஆசி வேண்டி மன்னாரில் இடம் பெற்ற சர்வமத பிரார்த்தனை
தற்காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை மற்றும் இயல்பு நிலை பாதிப்புகளால் துன்பப்படும் மக்களின் துயரில் நாங்களும் இணைந்து எமது நாட்டுக்காக ஒருமித்து பிராத்திக்கும் முகமாக குறித்த நிகழ்வு கறிற்ராஸ் வாழ்வுதயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது தேச விழிப்புணர்வு சுடரினை சர்வமத மதத்தலைவர்களும் இணைந்து ஏற்றி வைத்தனர்.
கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து மத வழிபாடுகள் இடம்பெற்றன.அனைத்து மதத்தவர்களும் ஒன்று சேர்த்து நாட்டில் உள்ள இயற்கை வளங்களை இறைவனுக்கு காணிக்கையாக்கி மிகவும் அர்த்தம் உள்ளதான பொது வழிபாடு நடத்தப்பட்டது.
இதில் நீர், மண், உப்பு தேங்காய் நெல் போன்ற பொருட்களை மையப்படுத்தி இவ்வழிபாடு இடம்பெற்றதுடன் தொடர்ந்து சர்வ மத பிரார்த்தனைகள் இடம்பெற்றது.
இதன் போது பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்கு ஆசி வேண்டி மன்னாரில் இடம் பெற்ற சர்வமத பிரார்த்தனை
Reviewed by Author
on
April 07, 2022
Rating:
Reviewed by Author
on
April 07, 2022
Rating:


No comments:
Post a Comment