அண்மைய செய்திகள்

recent
-

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் வரையறை நீக்கம்!

நாடாளவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் தமது எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது. இதற்கமைய இலங்கை கனியவள கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐ.ஒ.சி ஆகியவற்றின் எரிபொருள் விலைகள் ஒரே மட்டத்தில் காணப்படுகின்றன. இதேவேளை, எரிபொருளை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 எவ்வாறாயினும் டீசல், பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதோடு, எரிவாயு இன்மையால் மக்கள் தொடர்ந்தும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர். சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளன. இதேவேளை, வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகள் (வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு) உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இதனை அறிவித்துள்ளது.

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் வரையறை நீக்கம்! Reviewed by Author on April 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.