அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு பனிக்கன்குளம் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் புலமைப்பரிசில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம் (27)மாலை இடம்பெற்றது பாடசாலை வரலாற்றில் சுமார் 47 வருடங்களின் பின்னர் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை நிகழ்த்தப்பட்டு இருந்த நிலைமையில் குறித்த மாணவி மற்றும் 2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 2020 ஆம் ஆண்டு 2019 ஆம் ஆண்டுகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நேற்று மாலை பாடசாலை வளாகத்தில் சிறப்புற இடம்பெற்றது

 பாடசாலையில் அதிபர் தா.தயாகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் துணுக்காய் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார் நிகழ்வில் மாணவர்களுக்கான நினைவு கேடயங்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் குறித்த நிகழ்வில் வயலக்கல்வி அலுவலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் அயற் பாடசாலை அதிபர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பாடசாலையின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்











முல்லைத்தீவு பனிக்கன்குளம் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் புலமைப்பரிசில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் Reviewed by Author on April 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.