திருச்சி சிறப்பு முகாம் ஈழத்தமிழ் உறவுகளை விரைவில் விடுவிக்க கோரி மாந்தை கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
 கடவுச்சீட்டு இன்றி உள் நுழைந்த குற்றச்சாட்டில் மெரைன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு  தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் உணவொறுப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் ஈழ உறவுகளை அவர்களின் வழக்குகளை விரைவாக முடித்து தத்தமது உறவுகளுடன் அவர்கள் வாழ வழி அமைக்குமாறு கோரி மாந்தை கிழக்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டிருந்தது
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து  ஜெயரூபன்  அவர்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஆமோதித்திருந்து தீர்மானத்திற்கு  ஆதரவு தெரிவித்திருந்தனர்
இதே வேளை குறித்த தீர்மானத்தில் அவர்களை விடுவிக்க வேண்டிய நடவடிக்கைளை மேற்கொண்டு அவர்களின் வழக்குகளை விரைந்து முடித்து அனுப்பி வைக்குமாறு  தமிழக முதல்வரையும், இலங்கைக்கான இந்திய தூதரையும் விநயமாக கேட்டு நிற்கின்றோம் என்றும் தெரிவித்தனர் 
 திருச்சி சிறப்பு முகாம் ஈழத்தமிழ் உறவுகளை விரைவில் விடுவிக்க கோரி மாந்தை கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
 
        Reviewed by Author
        on 
        
May 24, 2022
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
May 24, 2022
 
        Rating: 




No comments:
Post a Comment