மின்சாரசபை ஊழியர் உள்ளிட்ட மூவர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு 24 வரை விளக்கமறியல்
இதன் பின்னணியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மின்சார சபை ஊழியர்கள் குறித்த ஊழியர் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் பார்வையிடச் சென்ற போது குறித்த கிராமத்தைச் சேர்ந்தவர் மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவருடைய வீட்டினை அடையாளம் காட்டியுள்ளார
இந்நிலையில் மின்சார சபை ஊழியர்களுக்கு தாக்குதல் நடத்தியவரது வீட்டினை காண்பித்தவர்கள் வீட்டுக்கு சென்ற மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்திய குழுவினர் இரவு வேளையில் அவர்களுடைய வீட்டில் சென்று அவரது தலையிலும் பலத்த காயங்களை உருவாக்கும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளார் இந்த தாக்குதல் காரணமாக மீண்டும் அந்த கிராமத்தை சேர்ந்த இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
குறித்த விடயம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் நேற்று காலை (10-05-2022) ஒருவரை கைது செய்தனர்
இந்நிலையில் குறித்த நபர் இன்று மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பண்பட்ட போது குறித்த நபரை எதிர்வரும் 24.05.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
மின்சாரசபை ஊழியர் உள்ளிட்ட மூவர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு 24 வரை விளக்கமறியல்
Reviewed by Author
on
May 11, 2022
Rating:
Reviewed by Author
on
May 11, 2022
Rating:







No comments:
Post a Comment