அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் நன்றிகள்-பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்!

இந்திய அரசின் இலங்கை மக்களுக்கான நிவாரணபொதிகள் இன்றும் நாட்டில் வழங்கிவைக்கப்படுகின்றன. அந்தவையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிவாரணபொதிகள் பிரதேசங்கள் தோறும் வழங்கிவைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 19 கிராமங்களை உள்ளடக்கிய வறிய குடும்பங்களுக்கான உதவி வழங்கம் நிகழ்வு நேற்று 30.05.2022 காலை புதுக்குடியிருப் பிரதேச செயலகத்தில் வைத்து தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

 புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராம சேவையாளர் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு வழங்கிவைத்துள்ளார்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 7ஆயிரத்தி 529 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். எங்கள் மக்களின் வறுமையினை உணர்ந்து காலத்தின் தேவையறிந்து செய்த இந்த அரிய உதவிக்கு எல்லோருக்கும் நன்றி பாராட்டுகின்றோம் என்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்கள் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் நன்றிகள்-பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்! Reviewed by Author on May 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.