அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் குஞ்சுக்குளம் தொங்கு பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தின் தற்போதைய அவல நிலை.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் தொங்கு பாலம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு வட மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப் பட்டு திறந்து வைக்கப்பட்ட சுற்றுலா மைய கட்டிடத்தொகுதி பாழடைந்த நிலையில்,குறித்த கட்டிடத் தொகுதியில் உள்ள பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். -கடந்த 2014 ஆம் ஆண்டு வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்படட அபிவிருத்திக் கொடை நிதி உதவியில் குஞ்சுக்குளம் தொங்கு பாலம் பகுதியில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அதிகாரிகளினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குறித்த சுற்றுலா மையம், நானாட்டான் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த சுற்றுலா மையம் தற்போது அடர்ந்த காடு போல் காட்சியளிப்பதோடு, குறித்த மைய கட்டிடத்தொகுதி சேதமாக்கப்பட் டுள்ளதோடு, பொருட்களும் உடைக்கப்பட்டுள்ளது. -பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு பாவனைக்காக கையளிக்கப்பட்டு சுமார் 6 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டு மக்கள் பாவனை இன்றி காணப்படுகின்றமை குறித்து உரிய அதிகாரிகள் கவனயீனத்துடன் செயல் படுகின்றமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். -இவ்விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள்,நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
                 
















.
மன்னார் குஞ்சுக்குளம் தொங்கு பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தின் தற்போதைய அவல நிலை. Reviewed by Author on May 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.