அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேரை மட்டு புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன் 2 படகுகளை கைப்பற்றி காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சம்பவதினமான இன்று 2 மணியளவில் அதிகாலையில் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவளைத்து சோதனைநடவடிக்கையை மேற்கொண்ட போது இரு படகுகளில் அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராகிய நிலையில் பெண்கள் உட்பட 21 பேரை கைது செய்தடன் இரு படகுகளை மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் களுவாஞ்சிக்குடியை சேர்ந்த இதன் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் Reviewed by Author on May 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.