அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 3582 மாணவர்கள் தகுதி : 33 நிலையங்களில் பரீட்சை

2022 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு கல்வி வலயங்களான முல்லை கல்வி வலயம் மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் மொத்தம் 33 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த வருடம் மொத்தமாக 3582 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றார்கள். 

இதில் தனிப்பட்ட பரீட்சாத்திகள் 727 பேரும், பாடசாலை பரீட்சாத்திகள் 2855 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். முல்லை கல்வி வலயத்தில் தனிப்பட்ட பரீட்சாத்திகள் 571 பேரும், பாடசாலைப் பரீட்சாத்திகள் 2020 பேரும் பரீட்சைக்கு தோற்றுவதுடன் துணுக்காய் கல்வி வலயத்தில் தனிப்பட்ட பரீட்சாத்திகள் 156 பேரும் பாடசாலைப் பரீட்சாத்திகள் 835 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றார்கள். மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் தடைகள் இன்றி மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது






முல்லைத்தீவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 3582 மாணவர்கள் தகுதி : 33 நிலையங்களில் பரீட்சை Reviewed by Author on May 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.