அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு!

முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் பெரண்டினா நிறுவனமும் இணைந்து கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு இன்று(27) காலை 10.00மணிக்கு இடம்பெற்றது. மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த செயலமர்வின் வளவாளராக யாழ்.நல்லூர் பிரதேச செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர் க.சிவப்பிரியா கலந்து கொண்டார். 

 குறித்த செயலமர்வானது தொழில் வாய்பை பெற்றுக்கொடுக்கும் முகமாகவும், உயர் தொழில் நுட்ப கற்கையினை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளுடனான உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு இடம்பெற்றது. இச் செயலமர்வில் மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள இணைப்பாளர் எஸ்.மயூரன் மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்







முல்லைத்தீவில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு! Reviewed by Author on May 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.