முல்லைத்தீவு மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது!
மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழ் செயற்பட்டுவருகின்ற பிரதேச செயலகங்களின் உள்ளகக் கணக்காய்வு அவதானங்கள், நிதி செயற்பாட்டு முன்னேற்றங்கள், கணக்காய்வு ஐய வினாக்கள், அவற்றுக்கான பதிலளித்தல் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் கடந்த கால கூட்ட அறிக்கை, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் குழு உறுப்பினர்களான மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் சுனில்ஜெயசேகர, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்ளகக் கணக்காய்வாளர் டி.எம்.ஆர்.கே டிசாநாயக்கா, மாவட்ட கணக்காய்வு அத்தியட்சகர் ஆதவன் ஆகியோரின் பங்கபற்றலுடன் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி. வில்வராஜா, உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது!
Reviewed by Author
on
May 27, 2022
Rating:

No comments:
Post a Comment