உக்ரைனிய படைகள் ஒரு ஆற்று பாலத்தை அழித்ததால், ரஷியாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு பலியாகி விட்டதாக தகவல்கள்
இந்த நிலையில் ரஷியாவின் ஒரு படைப்பிரிவினருக்கு துயர முடிவு நேரிட்டுள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் வழியாக சிவர்ஸ்கி டொனெட்ஸ் என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு மிதக்கும் பாலம் இருந்து வந்தது. ஆற்றைக் கடந்து வருவதற்கு இந்த பாலம் ரஷிய படைகளுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது.
இதை அறிந்து நோட்டமிட்டு வந்த உக்ரைன் படையினர் அந்தப் பாலத்தை அதிரடியாக தாக்கி அழித்தபோது, ரஷியாவின் ஒரு படைப்பிரிவினர் ஆற்றில மூழ்கி பலியாகி விட்டதாக உக்ரைன் மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலத்தின் அருகே நிறுத்தப்பட்ட ராணுவ வாகனங்களையும் உக்ரைன் படையினர் தாக்கி அழித்தனர்.
இதுபற்றி இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் நேற்று கூறுகையில், “ரஷியா குறைந்தபட்சம் ஒரு படைப்பிரிவை இழந்துள்ளது” என தெரிவித்தது. இந்த பாலத்தை அழித்ததையொட்டிய படங்களை உக்ரைன் வான்வழிப்படைகள் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே உக்ரைன் அதிகாரிகள், கருங்கடலில் ரஷிய கப்பல் ஒன்றை தங்கள் படையினர் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உக்ரைனுக்கு முக்கிய வெற்றி ஆகும்.
உக்ரைனிய படைகள் ஒரு ஆற்று பாலத்தை அழித்ததால், ரஷியாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு பலியாகி விட்டதாக தகவல்கள்
Reviewed by Author
on
May 14, 2022
Rating:
Reviewed by Author
on
May 14, 2022
Rating:




No comments:
Post a Comment