முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் ஊழியர்கள் கவனயீர்ப்பு
இதன் போது அகிம்சை போராட்டத்தினை அராயகமாக்கிய அரசே வெளியேறு,அரச பயங்கரவாதத்தினை எதிர்ப்போம் போன்ற அரசிற்கு எதிரான கோசங்களை தாங்கியவாறு கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். காலி முகத்திடலில் தன்னெழுச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு வன்முறையினை கையாண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் ஊழல்மிக்க அரசிற்கு எதிராகவும் நடக்கின்ற மக்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு அதில் கலந்து கொண்ட அப்பாவி பொது மக்களை தாக்குவது வேதனைக்குரிய விடையம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலர் காயப்பட்டு அனுமதிக்க்பபட்டுள்ளார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் அரசினால் மேலும் தொடருமானால் பல்வேறு இடங்களில் மேலதிகமான போராட்டங்கள் தீவிரமடையும் இதற்கு காரணமானவர்களை விரைவில் கைதுசெய்து நாட்டிற்கு பொறுப்பு கூறக்கூடிய ஆட்சிமுறைமையினை விரைவில் கொண்டுவரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் ஊழியர்கள் கவனயீர்ப்பு
Reviewed by Author
on
May 10, 2022
Rating:

No comments:
Post a Comment