அண்மைய செய்திகள்

recent
-

67வயது பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு 24 வரை விளக்கமறியல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 07.05.2022 அன்று இரவு தன்னுடைய பேத்தியின் 38 வயதான கணவண் மதுபோதையில் வந்து தனக்கு பலவந்தமாக சாராயம் பருக்கி துஸ்பிரயோகம் செய்ததாக 08.05.2022 அன்று முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்

 முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்ப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதான நபர் ஒருவர் முள்ளியவளை பொலிசாரல் நேற்று (10) கைது செய்யப்பட்டார் இந்நிலையில் சந்தேக நபர் இன்று மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 24.05.2022 வரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்


67வயது பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு 24 வரை விளக்கமறியல் Reviewed by Author on May 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.