ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும்
நடுத்தர மக்கள் தற்போது கிராமங்களில் இருந்து பத்து முதல் பதினைந்து மூட்டை நெல் எடுக்கின்றனர். சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய நெல் போதுமானதாக இல்லை. குறுகிய காலத்தில் அரிசியின் விலை சுமார் 500 ரூபாய் வரை உயரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சாக்கு, எரிபொருள், கூலி, உதிரிப் பாகங்கள், போக்குவரத்து செலவு உள்ளிட்ட அரிசியின் மொத்த செலவு உயர்ந்துள்ள சூழலில், ஒரு கிலோ அரிசியின் உற்பத்திச் செலவு 250 ரூபாவாக உள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ அரிசியின் விலையை மேலும் 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும்
Reviewed by Author
on
June 06, 2022
Rating:

No comments:
Post a Comment