அண்மைய செய்திகள்

recent
-

கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்பட்ட சிங்கப்பூர் பியர்; மதுப்பிரியர்கள் மத்தியில் வரவேற்பு

சிங்கப்பூரில் கழிவு நீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து பியர் தயாரிக்கப்பட்டு, ‘நியூப்ரூ’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் ஆகும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது. 

இந்தக் குடிநீரை பியர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்தச் சிறப்பு பியரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பியர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. இந்த பியர் மிகவும் சுவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 இந்த பியருக்கு தற்போது மதுப்பிரியர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட, அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகும். அந்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியதால், கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறு சுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது. முதலில் கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் அது குடிநீராக மாறுவதற்கு முன்பு பல்வேறு சுத்திகரிப்பு நிலைகளில் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயன்பாட்டுக்கு வருகிறது.


கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்பட்ட சிங்கப்பூர் பியர்; மதுப்பிரியர்கள் மத்தியில் வரவேற்பு Reviewed by Author on July 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.