கானாவில் புதிய வகை வைரசுக்கு 2 பேர் பலி
அவர்கள் உயிரிழப்பதற்கு முன்பு மருத்துவனையில் சிகிச்சை பெறும்போது, காய்ச்சல், வயிற்று போக்கு, ஒவ்வாமை மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு இருக்கின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு செனிகல் நாட்டின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் கிடைத்த பின்னரே, இதன் பாதிப்புகளை உறுதி செய்வது பற்றி பரிசீலிக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் “மார்பர்க்” வைரசின் பாதிப்பு தோன்றுவது இது இரண்டாவது முறை மட்டுமேயாகும். முதலில், கினியா நாட்டில் கடந்த ஆண்டு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் வேறு யாருக்கும் பாதிப்பு அறியப்படவில்லை. இதுபற்றி ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பு மண்டல இயக்குனர் மத்ஷிதிசோ மொய்தி கூறும்போது, கானா நாட்டு சுகாதார அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு உள்ளனர். பாதிப்பு பரவுவதற்கு முன்பே தயாராகி உள்ளனர். இது நல்லது. ஏனெனில், உடனடி மற்றும் திட்டமிட்ட செயலை மேற்கொள்ளாவிட்டால் இந்த வைரசின் பரவல் கைமீறி போக கூடும் என தெரிவித்து உள்ளார்.
கானாவில் புதிய வகை வைரசுக்கு 2 பேர் பலி
Reviewed by Author
on
July 18, 2022
Rating:

No comments:
Post a Comment