இங்கிலாந்தில் தீவிர வெப்ப அலை - பல கட்டடங்களில் தீப்பரவல்! லண்டன் மக்களுக்கு அவசர அறிவித்தல்
தற்போது வரை தீவிபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் வாகனங்கள் அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் இடங்களில் இருப்பதை உறுதி செய்வதற்காக, தீயணைக்கும் வீரர்களை சம்பவ இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு வாகன ஆதரவை வழங்குகிறோம்.
மேலும் எங்களால் முடிந்த ஆதரவை வழங்க அவர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம் என மெட் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், LFB அறிவுரைகளை லண்டன் வாசிகள் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்வதற்காக வரும் மணித்தியாலங்களில் பொலிஸ் அதிகாரிகள் திறந்த வெளிகளில் ரோந்து செல்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, இன்றிரவு பார்பிக்யூ அல்லது நெருப்பு வைக்க வேண்டாம் எனவும், உடைந்த போத்தல்கள் அல்லது கண்ணாடிகளை தரையில் விடாதீர்கள் எனவும், சிகரெட்டை பாவிக்க வேண்டாம் எனவும் லண்டன் மக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் தீவிர வெப்ப அலை - பல கட்டடங்களில் தீப்பரவல்! லண்டன் மக்களுக்கு அவசர அறிவித்தல்
Reviewed by Author
on
July 20, 2022
Rating:

No comments:
Post a Comment