அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர பகுதியில் சீரற்ற மின் விநியோகத்தினால் எரிபொருள் விநியோகத்தில் தாமதம்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை(11) காலை முதல் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்ட எரிபொருள் (பெட்ரோல்) விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. -எனினும் குறித்த தடங்கள் நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை(12) காலை முதல் தடைப்பட்டுள்ள கிராமங்களுக்கான எரிபொருள் விநியோகம்(பெட்ரோல்) மேற்கொள்ள துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மன்னார் பிரதேசச் செயலாளர் தெரிவித்தார். 

 மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை(11) காலை முதல் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடம் பெற்றது. தொடர்ச்சியாக இன்றைய தினம் திங்கட்கிழமை (11) காலை முதல் மின் தடங்கல் ஏற்பட்டது. எனினும் பல்வேறு தடங்களுக்கு மத்தியில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட போதிலும் குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை வழங்கும் பம் அதிகூடிய வெப்பம் அடைந்ததன் காரணத்தினால் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாத நிலையில் தடங்கல் ஏற்பட்டது. குறித்த விடயம் தொடர்பாக வரிசையில் நின்ற மக்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் மக்கள் உண்மை நிலையை அறிந்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். .எனினும் இன்றைய எரிபொருள் வழங்கும் திட்டத்தில் மேலும் சில கிராமங்களுக்கு தடங்களின் மத்தியில் பெட்ரோல் வழங்கப்படவில்லை. 

அதற்கு அமைவாக நாளை செவ்வாய்க்கிழமை காலை முதல் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு விடுபட்ட கிராம மக்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள உள்ளோம். உப்புக்குளம் தெற்கு,பெரியகடை,பெற்றா,சாவற்கட்டு,சின்னக்கடை ஆகிய 5 கிராம அலுவலகர் பிரிவுகளுக்கும் காலை 8.30 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கிராம மக்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு சென்று தம வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.





மன்னார் நகர பகுதியில் சீரற்ற மின் விநியோகத்தினால் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் Reviewed by Author on July 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.