துவிச்சக்கரவண்டியின் விலை 50,000 ரூபாவை கடந்தது
மக்கள் துவிச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள சூழ்நிலையில், அதன் விலையும் அதிகரித்துள்ளது.
தற்போதுவரை சாதாரண துவிச்சக்கரவண்டி ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாவைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள், ஒரு இலட்சம் ரூபா வரையான விலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், துவிச்சக்கர வண்டி உதிரிப்பாகங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, உதிரிப்பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
துவிச்சக்கரவண்டியின் விலை 50,000 ரூபாவை கடந்தது
Reviewed by Author
on
July 01, 2022
Rating:
Reviewed by Author
on
July 01, 2022
Rating:


No comments:
Post a Comment