மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியில் தீ வைத்து கொளுத்தப்பட்ட மீன் வாடிகள்
அங்கு உரிய நீதி கிடைக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இன்றைய தினம் (16)மன்னார் சிரேஷ்ட போலீஸ் அத்தியாட்சகரிடம் முறையிடுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சென்றுள்ளனர்.
கடந்த புரேவிப் புயல் பாதிப்பு கொரோனாவால் தொழில் இழப்பு காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு தொழில் செய்வதற்கு கடன் அடிப்படையில் பெறப்பட்ட உபகரண பொருட்களை விஷமிகள் தீயிட்டு கொளுத்தி உள்ளார்கள்.
இன்றைய பொருளாதார, எரிபொருள் தட்டுப்பாடு காலத்தில் குறித்த மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான நிலை என்ன? போலீசாரும் கடல் தொழில் திணைக்கள அதிகாரிகளும் தங்களுக்கு நீதியை பெற்று தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியில் தீ வைத்து கொளுத்தப்பட்ட மீன் வாடிகள்
Reviewed by Author
on
August 16, 2022
Rating:

No comments:
Post a Comment