முட்டை விலை குறைப்பு ஆனாலும் மன்னாரில் முட்டை விற்பனைக்கு இல்லை
இருந்த போதிலும் முட்டையில் விலை குறைக்கப்படவில்லை என்பதுடன் முட்டை விற்பனைக்கு சந்தையில் வரவிலை என உள்ளூர் முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்
அதே நேரம் கோழித்தீன்கள் மற்றும் முட்டைத்தீன் போன்ற மாஸ் வகைகளின் விலைகளை அரசாங்கம் குறைக்காமல் முட்டையின் விலையை குறைத்தால் இதே போன்று முட்டை விற்பனைக்கு வராத நிலையே ஏற்படும் எனவும் அரசாங்கம் கோழிகளுக்கான தீண்களின் விலையை முதலில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் முட்டை விலை மாத்திரம் இன்றி கோழி இறைச்சியின் விலையும் தான குறைவடையும் என உள்ளூர் கோழி மற்றும் முட்டை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்
இன்றைய நாள் நிலவரப்படி ஒரு கிலோ பிரொஜிலர் கோழி இறைச்சி 1600 ரூபாவாகவும் ஒரு வெள்ளை முட்டையின் விலை 70 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
முட்டை விலை குறைப்பு ஆனாலும் மன்னாரில் முட்டை விற்பனைக்கு இல்லை
Reviewed by Author
on
August 22, 2022
Rating:

No comments:
Post a Comment