பாணந்துறையில் சைக்கிள் மீது கார் மோதி விபத்து ; மாணவன் உயிரிழப்பு
இவர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மாலமுல்ல கிராமிய வங்கிக்கு முன்பாக உள்ள வீதிக்கு அருகில் தனது துவிச்சக்கர வண்டியை நிறுத்திய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரு பெண் ஓட்டிச் சென்ற , ‘எல்’ அட்டை பொருத்தப்பட்ட காரே வீதியை விட்டு விலகி, மாணவனின் மீது மோதியது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காரை செலுத்திச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அவர் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருந்தாலும், முறையாக வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி பெறாததால், காரின் இரு புறமும் ‘எல்’ தகடு போட்டு வாகனம் ஓட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறையில் சைக்கிள் மீது கார் மோதி விபத்து ; மாணவன் உயிரிழப்பு
Reviewed by Author
on
August 12, 2022
Rating:
Reviewed by Author
on
August 12, 2022
Rating:


No comments:
Post a Comment