James Webb எடுத்துள்ள வியாழன் கிரகத்தின் புதிய படம்
பிரபஞ்சத்தில் நமது பூமி இடம்பெற்றுள்ள பால்வெளி மண்டலம் உள்ளிட்ட கோடிக்கணக்கான மண்டலங்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில், James Webb தொலைநோக்கியின் மூலம் நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஏராளமான உடுத்திரள்கள் காணப்படுகின்றன. இந்தப் புகைப்படத்தின் ஒரு பகுதியானது, பெருவெடிப்பு நிகழ்ந்த ஆரம்ப காலத்தைக் காட்டுவதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று நாசா James Webb தொலைநோக்கியில் பதிவான வியாழன் கிரகத்தின் தோற்றப்படத்தை வெளியிட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தின் 5-வது கோளாகக் கருதப்படும் வியாழன், சூரியனிலிருந்து சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை முழுமையாகச் சுற்றி வருகிறது.
தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழனின் படம் திரவம்போல் காட்சியளிக்கிறது.
James Webb எடுத்துள்ள வியாழன் கிரகத்தின் புதிய படம்
Reviewed by Author
on
August 23, 2022
Rating:

No comments:
Post a Comment