இலங்கைக்கான நோர்வே தூதரகம் நிரந்தரமாக மூடப்படுகிறது
அதற்கமைய, வௌிநாடுகளிலுள்ள 5 தூதரகங்களை நிரந்தரமாக மூட தீர்மானித்துள்ளதாகவும், அதில் இலங்கையிலுள்ள தூதரகமும் உள்ளடங்குவதாகவும் நோர்வே அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள தமது தூதரகம் மூடப்பட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவில் எவ்வித தாக்கமும் ஏற்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையை உள்வாங்கும் வகையில், மற்றுமொரு நோர்வே தூதரகத்தில் தலைமை அதிகாரியையும் இராஜதந்திர ஊழியர்களையும் நியமிக்க எதிர்பார்ப்பதாகவும் நோர்வே அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கான நோர்வே தூதரகம் நிரந்தரமாக மூடப்படுகிறது
Reviewed by Author
on
September 10, 2022
Rating:

No comments:
Post a Comment