அண்மைய செய்திகள்

recent
-

மன அழுத்தத்தால் 55 பற்றரிகளை விழுங்கிய பெண் – மருத்துவர்களின் சாதனை

பெண்ணின் வயிற்றில் இருந்து 55 பற்றரிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்துள்ளனர். அயர்லாந்து நாட்டில் 65 வயதுடைய பெண்ணின் வயிற்றில் இருந்து 55 ஏஏ, ஏஏஏ வகை பற்றரிகளை அகற்றியிருக்கின்றனர். மன அழுத்தம் காரணமாக 65 வயது பெண் ஒருவர் இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் வேண்டுமென்றே பற்றரிகளை விழுங்கியிருக்கிறார். இவரை செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தப்போது அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட ‘ஏஏ மற்றும் ஏஏஏ’ ரக பற்றரிகள் இருப்பது உறுதியானது. 

 ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது இரைப்பை குடல் (ஜிஐ) பாதையை அடைத்துக்கொண்டு அதை தடுக்கும் வகையில் பற்றரிகள் எதுவும் எக்ஸ்-ரேவில் தோன்றவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அந்தப் பெண்ணின் உடலில் இருந்து இயற்கையாக மலம் வழியாக பற்றரிகள் வெளியேறும் வரை மருத்துவர்கள் காத்திருந்தனர். ஒரு வார காலத்தில், அந்தப் பெண் நோயாளி ஐந்து ஏஏ பற்றரிகளை இயற்கையாக வெளியேற்றினார். அதன்பிறகு அறுவை சிகிச்சையின் மூலம் வயிற்றில் சிறிய துவாரமிட்டு, 46 பற்றரிகளை அயர்லாந்து மருத்துவர்கள் குழுவினர் அகற்றினர். மீதமுள்ள 4 பற்றரிகள், பெருங்குடலில் சிக்கி, அவளது மலக்குடலில் ஆசனவாய் வழியாக வெளியேற்றப்பட்டன. மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில், பெண்ணின் குடல் மற்றும் வயிற்றில் இருந்து 55 பற்றரிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.

மன அழுத்தத்தால் 55 பற்றரிகளை விழுங்கிய பெண் – மருத்துவர்களின் சாதனை Reviewed by Author on September 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.