அண்மைய செய்திகள்

recent
-

'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் 59 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலையில் முன்னெடுப்பு.

'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவின் 59வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் புதன் கிழமை (28.09.2022) திருகோணமலை சலப்பை ஆற்று பகுதியில் இடம்பெற்றது. 

 இச் செயற்றிட்டத்தில் திருகோணமலை சலப்பை பகுதி மக்கள்,சிவில் சமூக அமைப்புக்கள்,பாதிக்கப்பட்ட மக்கள் விவசாய மற்றும் மீனவ அமைப்புகள், என பலரும் கலந்து கொண்டு கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளை முன் வைத்தனர். இதன் போது நாங்கள் நாட்டை துண்டாடவோ தனி அரசோ கேட்கவில்லை இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை கேட்கிறோம், எமக்கு வேண்டும், எங்கள் நிலம்,ஒன்று கூடுவது எமது உரிமை, வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகார பகிர்வு என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும், போன்ற பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.







'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் 59 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலையில் முன்னெடுப்பு. Reviewed by Author on September 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.