அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சர்வோதயத்தில் ஊழல் செயற்பாடுகளை முன்னிறுத்தி அனைத்து ஊழியர்களும் பதவி விலகல்

மன்னார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சர்வோதய நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களும் மன்னார் சர்வோதயத்தில் இடம் பெறும் பல்வேறு ஊழல் செயற்பாடுகளை முன்னிறுத்தி பதவி விலகி உள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,, இலங்கையில் செயற்பட்டு வரும் மிகப்பெரிய அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான சர்வோதயம் மன்னார் சர்வோதயத்தின் ஊடாக மாவட்ட ரீதியில் பல செயற்திட்டங்கள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை மன்னார் சர்வோதய மாவட்ட பணிப்பாளர் ஒழுங்கான முறையில் விடுவிப்பதில்லை என சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

 அதே நேரம் தொண்டு நிறுவனங்களால் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதார உதவிகளை கூட ஒழுங்காக வழங்குவதில்லை எனவும் இது தொடர்பாக பணியாற்றும் ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்ற போது முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் தெரிவிப்பதாகவும் அதே நேரம் பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் உத்தியோகத்தர்களுக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்ததாகவும் தெரிவித்து அணைத்து ஊழியர்களும் பதவி விலகி உள்ளனர். மேலும் தொடர்ந்து பிழைகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களை பழிவாங்குவங்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி விரிவான கடிதம் ஒன்றை சர்வோதய நிறுவனத்தின் தேசிய காரியாலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளது டன் மாவட்ட காரியாலயத்தில் பதவி விலகல் கடிதங்களையும் கையளித்துள்ளனர்





மன்னார் சர்வோதயத்தில் ஊழல் செயற்பாடுகளை முன்னிறுத்தி அனைத்து ஊழியர்களும் பதவி விலகல் Reviewed by Author on September 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.