அண்மைய செய்திகள்

recent
-

காதலை நிராகரித்ததால் காதலன் வெறிச்செயல்!

காதலை துண்டித்த 23 வயது யுவதியை, கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளான். கேரளாவின், பானூரில் இந்த கொடூர சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. விஷ்ணுபிரியா (23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விஷ்ணுபிரியாவும், ஷியாம்ஜித் என்பவரும் காதலித்து வந்த நிலையில், உறவினர்களின் எதிர்ப்பையடுத்து, விஷ்ணுபிரியா காதலை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷியாம்ஜித் இந்த கொலையை செய்துள்ளார். விஷ்ணுபிரியாவின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் அவரது பாட்டியின் மரணச்சடங்கு நடந்து வந்தது. 4 நாட்களின் முன்னர் பாட்டி உயிரிழந்திருந்தார். நேற்று மதியம், உடை மாற்ற வீட்டுக்கு வந்த விஷ்ணுபிரியா நீண்டநேரமாக வீடு திரும்பவில்லை.

 இதனால் சந்தேகமடைந்த தாயார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, விஷ்ணுபிரியா படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார். துண்டாடப்பட்ட தலை, அவரது கழுத்திலிருந்து தொங்கிய நிலையில் காணப்பட்டது. அவரது வீட்டிற்கு அருகில் சிவப்பு டி-சர்ட், மஞ்சள் தொப்பி மற்றும் முக கவசம் அணிந்த ஒரு நபரை பார்த்ததாக உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். இதையடுத்து சிசிடிவி கேமராக்களை மையமாக வைத்து பொலிசார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட விஷ்ணு பிரியாவின் செல்போன் தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இந்த விசாரணையில் தான் குற்றவாளிகள் பற்றிய தெளிவான துப்பு கிடைத்தது. பின்னர் கைபேசி கோபுரம் இருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலை நிராகரித்ததால் காதலன் வெறிச்செயல்! Reviewed by Author on October 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.