மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு
மசகு எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீளவும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு 450-500 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் தேவை. ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 50 மெட்ரிக் தொன் மட்டுமே சந்தைக்கு விடப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் அல்லது ஜெட் ஒயிலை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு
Reviewed by Author
on
October 13, 2022
Rating:

No comments:
Post a Comment