மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட சிரமதான நிகழ்வு
வைத்திய சாலை வளகத்தை சுத்தப்படுத்தும் முகமாகவும்,நோயாளர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் அசெளகரியங்களை குறைக்கும் முகமாக வைத்திய சாலையில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் , வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியியல் பரிபாலகர்கள், விடுதி சகோதரிகள், நிர்வாக உத்தியோகத்தர்கள், நிறைவுகாண்/துணை மருத்துவர்கள்,தாதியர்கள், நிர்வாக மற்றும் கணக்கியல்உத்தியோகத்தர்கள்,மேற்பார்வையாளர்கள், திட்டமிடல் மற்றும் தர முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், பராமரிப்பு மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள்,பரிசாரகர்கள்,சுகாதார பணி உதவியாளர்கள், மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து குறித்த சிரமதானப்பணில் ஈடுபட்டுள்ளனர்
எதிர்வரும் மாதங்களில் மன்னார் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை ஏற்படவுள்ளமையினால் ஏற்படுகின்ற டெங்கு பரவல் உட்பட பல சுத்தப்படுத்தல் பிரச்சினைகளை தீர்பதற்கு மாதம் தோறும் இவ்வாறான சிரமதான பணிகள் முன்னொடுக்கப்படவுள்ளமையினால் மாவட்ட இளைஞர்குழுக்கள் தண்ணார்வ தொண்டர்கள் எதிர்வரும் காலங்களில் இடம் பெறவுள்ள சிரமதான பணிகளில் தங்களால் ஆன உதவியை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட சிரமதான நிகழ்வு
Reviewed by Author
on
October 10, 2022
Rating:

No comments:
Post a Comment