அண்மைய செய்திகள்

recent
-

தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்தாவிடின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு

தனியார் பேருந்து உரிமையாளர்களினால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாவிடின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இரத்தினபுரி டிப்போவின் நடத்துனர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்னும் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்க பிரதம செயலாளர் சேபால லியனகே இவ்வாறு தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தாவிட்டால் நாடளாவிய ரீதியில் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்தாவிடின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு Reviewed by Author on October 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.