தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது – காஞ்சன
70 சதவீதமளவு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடையும் போது தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை குறைக்க முடியாது. டீசல் விநியோகத்தில் இதுவரை காலமும் வழங்கப்பட்ட நிவாரணம் நீக்கப்பட்டுள்ளது.
டீசல் விநியோகத்தின் நிவாரணம் நீக்கப்பட முன்னர் ஒரு லீற்றர் டீசல் விநியோகத்தின் போது 30 ரூபா நட்டத்தை எதிர்க்கொள்ள நேரிட்டது.
ஆகவே தற்போது டீசலின் விலையை குறைக்க முடியாது.பெற்றோல் இறக்குமதியில் 70 சதவீத இலாபத்தை பெற்றுக்கொண்டுள்ளதால் பெற்றோல் விலை குறைக்கப்பட்டது.
எதிர்வரும் 14 நாட்களுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் போது தற்போதைய விலை திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைப்பினை கொண்டு தேசிய மட்டத்தில் எரிபொருள் விலையை தீர்மானிக்க முடியாது” என்றார்.
தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது – காஞ்சன
Reviewed by Author
on
October 03, 2022
Rating:

No comments:
Post a Comment